அரிதாக வளரும் தாளிபனை, அழியாமல் காப்போம்
கொடிப்பள்ளம் சாலையில் உள்ள, #உடையான்மேடு என்ற சிற்றூரில் #தாளிப்பனை [Corypha umbraculifera] பூத்துக்குலுங்குகிறது. இதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனை சாலையில் உள்ள #சிதம்பரநாதன்பேட்டையிலும் தாளிப்பனை பூத்துக்குலுங்குகிறது. உலகிலேயே பூக்கும் தாவர வகைகளில் மிகப்பெரிய மஞ்சரி பெற்றுள்ள தாவரம் தாளிப்பனையாகும். பனை மரத்தைவிட இரண்டுமடங்கு உயரமாக, வானுயர்ந்து நின்று, அவ்வழியே போவோர் வருவோரை உற்றுநோக்க செய்கின்றன. இதுவும் ஊருக்கு ஒரு பெருமைதானே ! இதனை குடைப்பனை என்றும் அழைக்கின்றனர். தாளிப்பனை ஒரே ஒருமுறைதான் பூக்கும், அதன்பிறகு அழிந்துவிடும். தாளிப்பனையில் மலர்கள் தோன்றுவதற்கு முப்பது ஆண்டிற்கு மேலாகும், சிலவற்றில் எண்பது ஆண்டுகள்கூட ஆகும் என கருதப்படுகிறது. மலர்ந்த பிறகு கனிகள் தோன்றுவதற்கு ஓராண்டாகும். ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. அவசியம் இவைகளை சேகரித்து கன்றுகளை உற்பத்தி செய்யவேண்டும். அரிதாக வளரும் தாளிபனை, அழியாமல் காப்போம்
நன்று.
ReplyDeleteஇது நம்நாட்டு மரமா?
இலக்கியங்களில் சான்றுள்ளதா?
விவரம் தந்தால் மிக்கக நன்றியுடையேன்.